சொந்தமாக வீடு, கார் கூட கிடையாது; ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு - ஷாக்!

Indian National Congress Rahul Gandhi Kerala
By Sumathi Apr 04, 2024 04:15 AM GMT
Report

ராகுல் காந்தியின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல் காந்தி

கடந்த 2019ல் நடந்த தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரும் லோக்சபா தேர்தலிலும் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியிலேயே போட்டியிடவுள்ளார்.

rahul gandhi

இதற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து, தங்கை பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனுவில் சொத்து விவரங்கள் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில், கையில் ரூ.55 ஆயிரம் ரொக்கம், வங்கிகளில் ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 157, பங்கு சந்தையில் ரூ.4 கோடியே 33 லட்சத்து 60 ஆயிரத்து 519, Mutual fund வழியாக ரூ. 3 கோடியோ 81 லட்சத்து 33 ஆயிரத்து 572,

ராகுல் காந்தி திருமணம் - அந்த பெண்ணிடம் சட்டென கேட்ட சோனியா!

ராகுல் காந்தி திருமணம் - அந்த பெண்ணிடம் சட்டென கேட்ட சோனியா!

சொத்து மதிப்பு 

தங்க பத்திரம் வழியாக ரூ.15 லட்சத்து 21 ஆயிரத்து 740ம், பிற இன்சூரன்ஸ் உள்ளிட்ட வகைகளில் ரூ.61 லட்சத்து 52 ஆயிரத்து 426 முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சொந்தமாக வீடு, கார் கூட கிடையாது; ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு - ஷாக்! | Total Asset Value Value Of Rahul Gandhi

மேலும், ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்து 850 மதிப்பிலான நகைகள், இதன்மூலம் ரூ.9 கோடியே 24 லட்சத்து 59 ஆயிரத்து 264 மதிப்பிலான அசையும் சொத்து, ரூ.11 கோடியோ 15 லட்சத்து 2 ஆயிரத்து 598 மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன.

மொத்தமாக ரூ.20 கோடியே 39 லட்சத்து 61 ஆயிரத்து 862 மதிப்பிலான சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சொந்தமாக கார் மற்றும் வீடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.