உண்மை எதற்கும் அஞ்சாது - டெல்லி போலிஸ் ரெய்டு குறித்து ராகுல் காந்தி
டெல்லி காவல்துறை நேற்று ட்விட்டர் அலுவலகத்தில் ரெய்டு நடத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் ஐடி விங்கைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சி பொய் பிரச்சாரம் செய்கிறது என ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். காங்கிரஸ் டூல் கிட் என அதனை ட்ரெண்ட் செய்து வந்தனர்.
ஆனால் ட்விட்டர் நிறுவனம் அந்த பதிவுகளுக்கு 'Manipulated media' திரிக்கப்பட்ட பதிவு என டேக் செய்துவிட்டது. தவறுதலாக பரப்பப்படும் தகவல்களுக்கு ட்விட்டர் அந்த டேக் சேர்ப்பது வழக்கம்.
இந்நிலையில் மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 'Manipulated media' என சேர்க்கப்பட்டது தொடர்பாக ட்விட்டர் பதிலளிக்க வேண்டும் என கேட்டுள்ளது.
இன்று டெல்லி போலீஸ் இந்தியாவில் செயல்பட்டு வரும் ட்விட்டர் அலுவலகத்தில் ரெய்டு நடத்தியுள்ளது. இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி 'Truth remains unafraid' உண்மை எதற்கும் அஞ்சாது எனப் பதிவிட்டுள்ளார்.