அதிக வரி கட்டிய பிரபலங்கள் பட்டியல்; விஜய் 2வது இடம் - எத்தனை கோடி தெரியுமா?

Vijay Virat Kohli Actors
By Karthikraja Sep 06, 2024 01:17 PM GMT
Report

இந்திய அளவில் அதிக வருமான வரி கட்டிய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய் 2வது இடத்தில் உள்ளார்.

வருமான வரி

இந்தியாவில் உள்ள பல்வேறு துறை பிரபலங்கள் கடந்த ஆண்டு வருமானவரி செலுத்திய விவரங்களை அமெரிக்க இதழான ஃபார்ச்சூன் வெளியிட்டுள்ளது. 

shah rukh khan

இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் அதிகளவில் இடம் பிடித்துள்ளனர். தமிழ் சினிமாவை சார்ந்த நடிகர் விஜய்யும் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 

GOAT படத்தில் விஜய் சம்பளம் இத்தனை கோடியா? விளக்கமளித்த அர்ச்சனா கல்பாத்தி

GOAT படத்தில் விஜய் சம்பளம் இத்தனை கோடியா? விளக்கமளித்த அர்ச்சனா கல்பாத்தி

விஜய்

இந்த பட்டியலில் 92 கோடி ரூபாய் வருமானவரி செலுத்தி பாலிவுட் நடிகர் ஷாருக் கான் முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் தமிழ் சினிமா துறையை சார்ந்த முன்னணி நடிகர் விஜய் உள்ளார். இவர் கடந்த ஆண்டு மட்டும் 80 கோடி ருபாய் வருமான வரி செலுத்தி உள்ளார். 

vijay

75 கோடி ரூபாய் செலுத்தி நடிகர் சல்மான் கான் 3வது இடத்திலும், 71 கோடி ரூபாய் செலுத்தி நடிகர் அமிதாப் பச்சன் 4 வது இடத்திலும், 66 கோடி ரூபாய் செலுத்தி கிரிக்கெட் வீரர் விராட் கோலி 5 வது இடத்திலும் உள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள்

அதிக வருமான வரி கட்டிய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலும், 38 கோடி ரூபாய் செலுத்தி மகேந்திர சிங் தோனி 2 வது இடத்திலும், 28 கோடி ரூபாய் வரி செலுத்தி சச்சின் டெண்டுல்கர் 3 வது இடத்திலும், 23 கோடி ரூபாய் செலுத்தி சவுரவ் கங்குலி 4 வது இடத்திலும், 13 கோடி ரூபாய் செலுத்தி ஹர்திக் பாண்டியா 5வது இடத்திலும் உள்ளனர்.

virat kohli

அதிக வருமான வரி கட்டிய நடிகைகள் பட்டியலில் ரூ.20 கோடி வரி செலுத்தி நடிகை கரீனா கபூர் முதலிடத்திலும், 12 கோடி ருபாய் செலுத்தி நடிகை கியாரா அத்வானி 2 வது இடத்திலும், 11 கோடி செலுத்தி நடிகை கத்ரீனா கைப் 3வது இடத்திலும் உள்ளார்.