GOAT படத்தில் விஜய் சம்பளம் இத்தனை கோடியா? விளக்கமளித்த அர்ச்சனா கல்பாத்தி

Vijay Greatest of All Time
By Karthikraja Sep 01, 2024 06:45 AM GMT
Report

GOAT படத்தில் நடிகர் விஜய்யின் சம்பளம் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசியுள்ளார்.

GOAT

நடிகர் விஜய் நடித்துள்ள GOAT படம் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் இசையமைத்துள்ள இந்த படத்தில், சினேகா பிரசாந்த், மோகன், பிரபு தேவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். AGS நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

GOAT movie

விஜய் அரசியலுக்கு வந்த பின் வெளியாகும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில் ப்ரோமோஷன் வேளைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. 

GOAT படம் இப்படி இருக்க வேண்டும் - வெங்கட் பிரபுவிடம் அஜித் சொன்ன விஷயம்

GOAT படம் இப்படி இருக்க வேண்டும் - வெங்கட் பிரபுவிடம் அஜித் சொன்ன விஷயம்

அர்ச்சனா கல்பாத்தி

படம் குறித்த நேர்காணலில் பேசிய தயாரிப்பளார் அர்ச்சனா கல்பாத்தி, "தற்போதைய சூழலில் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் உள்ளார். பிகில் படத்தின் மொத்த பட்ஜெட் 180 கோடி. ஆனால் கோட் படத்தின் பட்ஜெட் 400 கோடி. அதில் விஜய்யின் சம்பளம் 200 கோடி. 

archana galpathi about vijay goat

பிகில் படம் எடுக்கும் போது இருந்த நடிகர் விஜய் மார்க்கெட்டுக்கும் தற்போதைய மார்க்கெட்டும் 5 வருட இடைவெளி உள்ளது. இந்த காலத்தில் விஜய்யின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துவிட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, வட இந்தியா மற்றும் வெளிநாடு என அணைத்து இடங்களிலும் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வளவு சம்பளம் கொடுத்ததும் எங்களால் லாபம் பார்க்க முடிகிறது.

இவ்வளவு பணம் செலவழிப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் நல்ல ஸ்கிரிப்ட் வேண்டும் என அழுத்தம் உள்ளது. விஜய் கடின உழைப்பாளி அவரை நம்பி தைரியமாக ஒரு ப்ராஜெக்ட்டில் இறங்கலாம்" என தெரிவித்துள்ளார்.