சிறந்த முதலமைச்சர்கள் பட்டியல்; யார் முதலிடம்? தமிழக முதல்வருக்கு எந்த இடம்?
சிறந்த மாநில முதலமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
விரும்பும் தலைவர்?
மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் மக்களின் மனநிலை குறித்து, MOOD OF THE NATION என்ற தலைப்பில் பிரபல செய்தி நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
அதன்படி, மக்கள் விரும்பும் தலைவர் யார்? என்பது தொடர்பான கணிப்பில், பிரதமர் மோடி 49 சதவீதத்துடன் முதலிடத்தில் தொடர்கிறார். ராகுல்காந்தி 22 புள்ளி 4 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
சிறந்த முதலமைச்சர்?
நாட்டின் சிறந்த முதலமைச்சர்கள் கருத்துக்கணிப்பில், அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா 51 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளார். 46 சதவீதத்துடன் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 2வது இடத்திலும், குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
அடுத்த இடத்தில் 44 சதவீத மக்கள் ஆதரவுடன் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் இருக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 40 சதவீத ஆதரவுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 39 சதவீத ஆதரவுடன் 6வது இடத்தில் உள்ளார்.