இந்த கடற்கரைகளுக்கு செல்ல ஆடையே தேவையில்லை - எங்கெல்லாம் தெரியுமா?
சுற்றுலா பயணிகள் நிர்வாணமாக உலா வரும் கடற்கரைகள் உள்ளன.
நிர்வாண கடற்கரைகள்
கடற்கரையில் நிர்வாணமாக இருப்பதை ’சன் பாத்’ என அழைக்கின்றனர். இவ்வாறு ஆடைகளின்றி இருப்பது மனதிற்கு ஒருவித அமைதி கிடைப்பதாக கூறுகின்றனர். உலகின் பல நாடுகளில் நிர்வாண கடற்கரைகள் உள்ளன.
அந்த வரிசையில், பிரான்சில் உள்ள லூகாட் கடற்கரையும் ஒன்று. யார் வேண்டுமானாலும் நிர்வாணமாகச் செல்லலாம். குரோஷியாவில் உள்ள Valalta கடற்கரை. பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஆடையின்றி கடலில் வேடிக்கை பார்த்துவிட்டு செல்கின்றனர்.
டென்மார்க்கில் உள்ள பெல்லூவ் பீச் உலகின் பிரபலமான நிர்வாண கடற்கரைகளில் ஒன்று. இங்கு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக இங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தாலி, கார்னிக்லியா கடற்கரை மிகவும் பிரபலம். இந்த கடற்கரையை அடைய சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டும்.
பிரான்சில் உள்ள கேப் டி அக்டே கடற்கரை பிரத்யேக நிர்வாண கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் ஆடைகளோடு சென்றால் அங்கிருக்கும் காவலாளர்கள் ஆடைகளை அப்புறப்படுத்தச் சொல்வார்கள்.