ஆடைகளை கழட்டிவிட்டு நிர்வாணமாக ஓடிய நபர் - ஆடிப்போன விமான நிலையம்!

Tamil nadu Chennai
By Sumathi May 30, 2024 04:32 AM GMT
Report

ஆண் பயணி ஆடைகளைக் கலைத்துவிட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் பயணியின் செயல்

சென்னையில் இருந்து ஐக்கிய அரபு நாடான அபுதாபி செல்லும் எத்திஹாட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.

chennai airport

தொடர்ந்து அதில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். இதில், அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியரான பெத்தனன் இளங்கோ (47) என்ற பயணி,

தனது தந்தையுடன் அபுதாபிவழியாக அமெரிக்கா செல்வதற்காக வந்திருந்தார். அப்போது, பெத்தனன் இளங்கோ திடீரென்று தனது ஆடைகளைக் கலைந்துவிட்டு நிர்வாணமாக ஓடத் தொடங்கினார்.

கால்நடைக்கு புல் அறுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

கால்நடைக்கு புல் அறுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

பரபரப்பு சம்பவம்

உடனே, விமான நிலைய அதிகாரிகள் அவரைப் பிடித்து மிரட்டி ஆடைகளை அணியச் செய்தனர். இதுகுறித்து பேசிய அவரது அப்பா, தனது மகன் ஏதோ மனஅழுத்தத்தில் இதுபோல் செய்துவிட்டார் எனத் தெரிவித்தார்.

ஆடைகளை கழட்டிவிட்டு நிர்வாணமாக ஓடிய நபர் - ஆடிப்போன விமான நிலையம்! | Male Passenger Ran Away Disrobing Chennai Airport

ஆனால், இது போன்ற செயலில் ஈடுபட்டஇந்த பயணியை எங்களுடைய விமானத்தில் பயணிக்க அனுமதிக்க முடியாது எனக்கூறி அவரதுபயணத்தை எத்திஹாட் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ரத்து செய்தனர்.

இதனையடுத்து, விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அவரைமதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.