அரை நிர்வாணமாக விமானத்தில் தகராறில் ஈடுபட்ட பெண் - என்ன காரணம்
நடுவானில் விமானத்தில் பெண் பயணி இருவர் அரை நிர்வாணமாக தகராறு செய்துள்ளார்.
பெண் தகராறு
அபுதாபியில் இருந்து விஸ்தாரா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான யுகே 256 விமானம் மும்பை நோக்கி புறப்பட்டது. அதில், இத்தாலியைச் சேர்ந்த பாவ்லோ பெருசியோ என்ற பெண் எகானமி பிரிவில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கி இருந்தார்.
ஆனால், பிசினஸ் வகுப்பில் இருக்கை கோரி தகராறு செய்துள்ளார். மேலும் தொடர்ந்து, தன் ஆடைகள் சிலவற்றை கலைந்து அரை நிர்வாணமாக அங்குமிங்கும் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து, விஸ்தாரா விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் "விஸ்தாரா விமான நிறுவனம் தனது பயணிகளின் பாதுகாப்பு,
விமான நிறுவனம் நடவடிக்கை
மாண்புக்கு எந்தவிதமான இடையூறு ஏற்படுவதையும் பொறுத்துக் கொள்ளாது. அதேபோல் ஊழியர்களின் பாதுகாப்பையும், மாண்பையும் உறுதி செய்யத் தவறாது. அதனால் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடனேயே பைலட் உடனடியாக பாதுகாப்பு அமைப்புகளுக்கு தகவல் கொடுத்துவிட்டார்.
விமானம் தரையிறங்கியதும் உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர் பரிந்துரைத்துவிட்டார். இது தொடர்பாக எங்கள் நிறுவனம் முறையாக அறிக்கையும் வெளியிட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். அதனையடுத்து, விமானம் தரையிறங்கியதும் அந்த பெண் பயணி மீது புகாரளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் விஸ்தாரா விமான நிறுவனம் நடந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுத்துவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது.