உலகின் வாழத் தகுந்த சிறந்த இடங்கள் - 4வது முறையாக இதுதான் முதலிடம்!
உலகின் வாழத் தகுந்த இடங்கள் குறித்த தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
வாழத் தகுந்த இடங்கள்
சர்வதேச அளவில் மிகவும் வாழக்கூடிய நகரங்கள் என்ற பட்டியலை எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் என பல்வேறு காரணிகளை வைத்து இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளனர்.
இதில் மொத்தம் 173 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா முதலிடத்தில் உள்ளது. டென்மார்க்கின் கோபன்ஹேகன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டும் அதுதான் இரண்டாவது இடத்தில் இருந்தது.
தரவரிசை
மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய நகரங்கள் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளது. டாப் 10 இடங்களில் கனடா நாட்டில் இருந்தே அதிகபட்சமாக 3 நகரங்கள் இடம்பிடித்துள்ளன சுவிஸ் நாட்டின் சூரிச் ஆறாவது இடத்தையும், ஜெனீவா ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளது.
ஜப்பானின் ஒசாகா நகரம் 10வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை டெல்லி மற்றும் மும்பை என இரு நகரங்களும் 141வது இடத்தில் உள்ளன. சென்னை 144வது இடத்திலும் உள்ள நிலையில் அகமதாபாத் 147ஆவது இடத்திலும் மற்றும் பெங்களூரு 148வது இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தானின் கராச்சி, நைஜீரியாவின் லாகோஸ், அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ், லிபியாவின் திரிபோலி ஆகிய நகரங்கள் மிக மோசமான 5 நகரங்களாக உள்ளன.