கொத்து கொத்தா முடி கொட்டுகிறதா? இந்த மாற்று வழியை கண்டிப்பா ஃபாலோ பண்ணி பாருங்க.!
முடி உதிர்வதற்கான காரணங்களும், அதற்கான தீர்வு சிலவற்றையும் பார்ப்போம்...
இன்றைய கால கட்டத்தில் பலருக்கு முடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்துவிட்டது. இதனாலேயே பல பேர் மன உளைச்சலுக்கு ஆளாவதை பார்த்திருப்போம். அந்த அளவுக்கு முடி உதிர்வது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தீர்வாக சரியான முறையில் டயட் எடுத்தால் முடி உதிர்வதுடன் வளர்ச்சியும் அதிகரிக்கலாம்.
கேரட்:
கேரட் சாப்பிட்டால் முடி உதிர்வதை நிறுத்தலாம். ஒரு நாளைக்கு ஒரு கேரட் சாப்பிட முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியத்தை வலுப்படுத்த முடி உதிர்வதைத் தடுக்க வைட்டமின்கள் தேவைப்படுகின்றன.
முட்டை:
அதிக முடி உதிர்வை சந்தித்தால், முட்டையை சாப்பிடுங்கள். அதன் மூலம் முடி உதிர்வதை தடுத்து வளர்ச்சியை அதிகரிக்க முடியும். புரோட்டீன்களுடன், முட்டையில் பயோட்டின் நிறைந்த உணவு உள்ளது, இது முடி உதிர்வதை தடுக்கிறது மற்றும் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கிறது.
அவகேடோ:
இதில், வைட்டமின் ஈ உள்ளது, இது முடி தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.
பசலைக்கீரை:
கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கூந்தல் வலுப்பெறும்.
ஓட்ஸ்:
இதில் இரும்பு, துத்தநாகம் மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது.