நரை முடியை மீண்டும் கருப்பாக்கலாம் - விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!

Hair Growth New York
By Sumathi Apr 25, 2023 05:26 AM GMT
Sumathi

Sumathi

in அழகு
Report

மனிதர்களுக்கு தலைமுடி நரை எவ்வாறு உருவாகிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நரை முடி

நியூயார்க் பல்கலைக்கழகம் எலிகளை வைத்து ஆய்வினை மேற்கொண்டு, நரைமுடி ஏற்படுவதற்கான காரணம் குறித்த புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், நம் உடம்பில் உள்ள ஸ்டெம் செல்கள் தன்னைத் தானே புதுப்பித்துக்கொண்டு உருமாற்றம் அடையும் திறன் கொண்டவை.

நரை முடியை மீண்டும் கருப்பாக்கலாம் - விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு! | Scientists Reveal Reason Why Your Hair Turns Grey

இவை நுண்ணறைகளுக்கு நடுவே அடிக்கடி நகர்ந்து ஊடுருவும் காரணத்தினால் தான் முடிக்கு கருப்பு நிறத்தினை கொடுத்து அவற்றை வளமாக வைத்து கொள்ள உதவுகின்றன. நமக்கு வயதாக ஆக இவை நகரும் திறனை இழக்கிறது.

காரணம்

அதனால் தான் நமக்கு நரை முடி ஏற்படுகிறது. இளவயதில் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இந்த ஸ்டெம் செல்கள் நகரும் திறனை இழக்கலாம் அதனால் இளநரை ஏற்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரை முடியை மீண்டும் கருப்பாக்கலாம் - விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு! | Scientists Reveal Reason Why Your Hair Turns Grey

இந்த ஆய்வு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. காரணம் இதை பயன்படுத்தி நரைத்த முடியை மீண்டும் கருமையாக்கவும், முடி நரைக்காமல் தடுக்கவும் வழிகளை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.