தலைமுடி கரு, கருவென வளர வைக்கும் கறிவேப்பிலை துவையல்! செய்வது எப்படி?

life-style-health
By Nandhini Jul 12, 2021 01:32 PM GMT
Report
100 Shares

தலைமுடி அழகை அதிகரித்துக் காட்டுவது மட்டுமல்ல, நம் உடல் ஆரோக்கியத்தையும் வெளிக்காட்டும். தலைமுடி உதிர்வது, முடி மெலிந்து காணப்படுதல், பொடுகுத் தொல்லை போன்றவை சரியான பராமரிப்பு இல்லாமல் மட்டும் ஏற்படுவதல்ல.

அதற்கு பின் வேறு சில காரணங்களும் உள்ளன. குறிப்பாக இந்த தலைமுடி பிரச்சனைகள் நம் உடலில் உள்ள பிரச்சனைகளை நமக்கும் உணர்த்தும்.

ஒரு நாளைக்கு 80-100 முடிக்கு மேல் உதிர்ந்தால், அது சாதாரணம் அல்ல. அப்படி அளவுக்கு அதிகமாக உதிர்ந்தால், நீங்கள் அதிக மன அழுத்தத்தில் உள்ளீர்கள் என்றும், உங்கள் உடலில் போதிய அளவு இரும்புச்சத்து இல்லை என்றும் அர்த்தம். அதுமட்டுமின்றி, நீரிழிவும் இதனை உணர்த்தும்.\

தலைமுடி கரு, கருவென வளர வைக்கும் கறிவேப்பிலை துவையல்! செய்வது எப்படி? | Life Style Health

தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தி, முடியை வளர வைக்கும் கறிவேப்பிலை துவையலை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை - 3

கைப்பிடி காய்ந்த மிளகாய் - 5

உளுந்து - 2

தேக்கரண்டி பூண்டு - 2 பல்

தேங்காய் துருவல் - 3

தேக்கரண்டி சீரகம், உப்பு, புளி - சிறிதளவு

நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், மிளகாய் வற்றல், உளுந்து போட்டு வறுக்க வேண்டும்.

அத்துடன், பூண்டு, புளி, சுத்தம் செய்த கறிவேப்பிலை, சீரகம் போட்டு வதக்க வேண்டும்.

கறிவேப்பிலை நன்றாக வதங்கும் முன், தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்க வேண்டும்.

ஆறியதும், தேவையான உப்பு போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.

சத்தும், சுவையும் மிக்க, 'கறிவேப்பிலை துவையல்' தயார்.

இந்த துவையலை சுடு சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

இந்த உணவை அடிக்கடி உண்டால், இளநரை குறைபாடு நீங்கி விடும்.