பெண்கள் தனியா ட்ரிப் போறீங்களா? சிறந்த நாடுகளில் முதலிடம் எதற்கு தெரியுமா?

Sri Lanka Japan Portugal
By Sumathi Apr 04, 2024 10:02 AM GMT
Report

உலகில் பெண்கள் தனியாக சுற்றுலாப் பயணம் செய்யக்கூடிய சிறந்த நாடு எது தெரியுமா?

இலங்கை

கோடை விடுமுறை என்பதால் நண்பர்கள், குடும்பம் என சுற்றுலா செல்வதற்கான திட்டமிடல் நடப்பது வழக்கம். அதிலும் பெண் தோழிகள் கேங்காக சேர்ந்து சுற்றுலா செல்ல திட்டமிருந்தால் உங்களுக்கான தகவல் தான் இது...

Czechia

உலக நாடுகளில் பல நாடுகள் பாதுகாப்பான சுற்றுலா அனுபவத்தை வழி காட்டுதல், நட்புடன் பழகும் உள்ளூர்வாசிகள், சமூகத்தொடர்பு மற்றும் அமைதியான மனநிலையை பெண்களுக்காக தருகிறது.

japan

அந்த வரிசையில், பெண்கள் தனியாக சுற்றுலா செல்ல சிறந்த இடமாக இலங்கை உள்ளது. இந்தியாவின் அண்டை தீவு நாடான இலங்கை சுற்றுலாவிற்கு பெயர்போன இடம். இயற்கை சூழலுக்கான கூடுதல் அம்சமாக உள்ளது. புராதனம்,வரலாறு, தொல்லியல், பழமை ஆகியவற்றில் உங்களுக்கு நாட்டம் இருந்தால் இலங்கைகக்கு சுற்றுலா செல்லலாம்.

முருகனின் அறுபடை வீடு இலவச சுற்றுலா பயணம் - அமைச்சர் சேகர்பாபு அப்டேட்!

முருகனின் அறுபடை வீடு இலவச சுற்றுலா பயணம் - அமைச்சர் சேகர்பாபு அப்டேட்!

சுற்றுலாவுக்கு பெஸ்ட்

இலங்கை தற்போது சுற்றுலாத்துறையின் வளர்ச்சியில் மிகவும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறது. குறைந்த விலையில் தங்குமிடங்கள், சுலபமாக பயன்படுத்தக்கூடிய பொது போக்குவரத்து, சிறப்பான சுற்றுலா கட்டமைப்பு என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

portugal

மேலும், பெண்கள் தனியாக சுற்றுலாச் செல்லக்கூடிய மிகச் சிறந்த நாடுகளின் வரிசையில் இரண்டாம் இடத்தில் போர்ச்சுகல், 3வது இடத்தில் செக்கியா, 4வது இடத்தில் ஜப்பான் மற்றும் 5வது இடத்தில் குவாத்தமாலா உள்ளது.