டாப் 7 பணக்கார மாநிலங்கள்; அசுர வேகத்தில் தமிழகம் - எத்தனையாவது இடம் தெரியுமா?
இந்தியாவின் டாப் 7 பணக்கார மாநிலங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பணக்கார மாநிலங்கள்
இந்தியாவின் பணக்கார மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இதன் தலை நகரமான மும்பை, 31 டிரில்லியனுக்கும் அதிகமான GSDPஐ கொண்டுள்ளது. தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது. உற்பத்தி துறையில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளது. 20 டிரில்லியனுக்கும் அதிகமான GSDP-யை (Gross State Domestic Product) கொண்டு பொருளாதார பலம் வாய்ந்த நாடாக உள்ளது.
லிஸ்ட் இதோ
3வதாக பெரிய தொழில் நிறுவனங்களை கொண்ட மாநிலமாக குஜராத் உள்ளது. பெட்ரோ கெமிக்கல் மற்றும் மருந்துத் துறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. உத்தரபிரதேசம் உணவு பாதுகாப்பை வழங்கும் மாநிலமாக உள்ளது. அதன்படி சுமார் 19.7 டிரில்லியன் GSDP-யை கொண்டுள்ளது.
ஐந்தாவது இடத்தில் பெங்களூருவை தலைமை இடமாக கொண்டுள்ள கர்நாடகா உள்ளது. ஐடி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரித்து பொருளாதாரம் வளர உதவுகின்றன.
தொடர்ந்து மேற்கு வங்கம் 6வது இடத்திலும், பட்டியலில் கடைசியாக ஆந்திர பிரதேசம் உள்ளது. இது 11.3 டிரில்லியன் GSDP-யை கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் பயோடெக்னாலஜிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.