நமது தேசியக்கொடியும் , நமது நாடும் ஆபத்தில் உள்ளது. : ராகுல்காந்தி எச்சரிக்கை
தமிழகம், கேரளா, கர்நாடக என 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களை இந்த பாதயாத்திரை மூலம் கடக்க உள்ளார். 3570 கிமீ தொலைவு பயணிக்க உள்ளார் ராகுல்காந்தி.
இந்த பாதயாத்திரை இன்று மாலை கன்னியாகுமரியில் தொடங்கியது காலையில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராகுல் காந்தி தந்தையும், மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று வணங்கிவிட்டு ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி புறப்பட்டிருந்தார்.
கன்னியாகுமரியில் முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக்கொடியினை ராகுலிடம் கொடுத்து பாதாயாத்திரையினை தொடங்கி வைத்தார் , அப்போது விழாவில் பேசிய ராகுல் :
தமிழ்நாட்டுக்கு வருவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி
அழகான தமிழ்நாட்டுக்கு வருவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது 3 சமுத்திரமும் சங்கமிக்கும் இவ்விடத்தில் நாட்டுக்கான ஒற்றுமை பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி இந்த தேசியக்கொடி ஒவ்வொரு குடி மகனின் அடையாளம் என்று கூறினார்.
தேசியக் கொடியினை கையில் ஏந்தி நாம் நீண்ட நெடிய போராட்டத்தை சந்தித்துள்ளோம் நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி சொந்தமானது நம் தேசியக்கொடி நமது இந்தியர்களின் அடையாளம்.
சில குறிப்பிட்ட பணக்கார தொழில் அதிபர்கள் இந்தியாவை தங்கள் கையில் வைத்து கொள்ள நினைக்கின்றனர்.மேலும் நாட்டின் முக்கிய துறைகளை பாஜக ஆதரவினை பெற்ற தொழிலதிபர்கள் வசம் உள்ளது எனக் கூறினார்.
இந்தியாவில் உள்ள ஒவ்வெரு நிறுவனமும் ஆர் எஸ் எஸ் மற்றும் பிஜேபி நிறுவனங்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளதால்நமது தேசியக்கொடியும் , நமது நாடும் ஆபத்தில் உள்ளது
ஆக வே நமது தேசியக்கொடியும் , நமது நாடும் ஆபத்தில் உள்ளது, சிபிஐ வைத்து மிரட்ட விடாலம் என நினைக்கிறது பாஜக , ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை இந்திய மக்கள் எபோதும் யாருக்கும் பயப்படமாட்டார்கள்.
பாஜக அரசினால் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி, விவாசாய சட்டதிருத்தமசோதா, பணமதிப்பிழப்பு நடவடிக்கை இவை எல்லாம் பாஜகவின் ஆதரவு பெற்ற தொழில் அதிபர்களின் லாப நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டவையே.
முதலாளிகள் இல்லாமல் பாஜகவால் இருக்க முடியாது
பாஜக ஆட்சியில் சிறுகுறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வாழ முடியாத சூழல் நிலவி வருகிறது; பேரழிவை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது
மதம், மொழியின் மூலம் இந்தியாவை பிளக்க பாஜக முயற்சி. இந்தியாவை யாராலும் பிளவுபடுத்த முடியாது;
பாஜக மிரட்டலுக்கு ஒருபோதும் எதிர்க்கட்சிகள் அடிபணியாது
பெரு முதலாளிகள் இல்லாமல் பாஜகவால் இருக்க முடியாது. பெரு முதலாளிகளுக்கான திட்டங்களையே பிரதமர் கொண்டு வருகிறார்; ஆங்கிலேயர்களை போல் ஆட்சி நடத்திவருகிறார் பிரதமர்.
இங்கு பறக்கும் தேசியக்கொடி, ஒரு மாநிலத்திற்கோ, ஒரு மதத்திற்கோ, தனிப்பட்ட ஒருவருக்கோ சொந்தமானது அல்ல
இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடையாளம் இந்தக்கொடி
நடைபயணத்தை துவக்கி வைத்து சிறப்பித்த தமிழக முதல்வர், என்னுடைய சகோதரர் மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
,