எங்கேயும் நிற்காது - உலகிலேயே மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமானம் இதுதான்!
உலகில் எங்குமே இடையில் நிற்காமல் நீண்ட தூரம் செல்லும் விமானம் குறித்த தகவல்.
நீண்ட தூர பயணம்
உலகில் நீண்ட தூர பயண பிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். அதிலும் விமானத்தில் பயணிக்க விரும்புவோர் நிறையவே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நீண்ட தூர விமான பயணத்திற்காகவே இரண்டு நகரங்கள் உள்ளன.
அதுதான் தான் நியூயார்க்- சிங்கப்பூர் விமான பயணம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இந்த விமானம் எங்குமே இடையில் நிற்காமல் 15,345 கிலோ மீட்டர் தூரத்தை 18 மணி நேரம் 7 நிமிடத்தில் கடக்கிறது.
பெர்த் - லண்டன்
அதேபோல், நீண்ட பயண தூரம் கொண்ட உலகின் இரண்டாவது விமானமும் சிங்கப்பூருக்கு தான் வருகிறது. நேவார்க்-சிங்கப்பூர் இடையே 15,345 கிலோ மீட்டர் தூரத்தை 18 மணி நேரம் 25 நிமிடத்தில் அந்த விமானம் கடக்கிறது.
மேலும், உலகின் மூன்றாவது நீண்ட பயண நேரம் கொண்ட எங்கும் இடையில் நிற்காத விமானம் பெர்த்-லண்டன் இடையே செல்கிறது. இந்த விமானம் 14500 கிலோ மீட்டர் தூரத்தை 17 மணி நேரம் 32 நிமிடம் பயணித்து கடக்கிறது.