விமானத்தில் செய்யக்கூடாத காரியம் - ஆறுமுகத்தால் அலறிய பணிப்பெண்கள்!

Tamil nadu Chennai Flight
By Jiyath Jun 11, 2024 11:09 AM GMT
Report

பயணி ஒருவர் விமானத்தில் புகைப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. 

புகைப்பிடித்த பயணி 

சென்னை விமான நிலையத்திலிருந்து இண்டிகோ விமானம் ஒன்று மலேசியா நோக்கி புறப்பட தயாராக இருந்தது. இரவு 10:15 மணிக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தில் 176 பயணிகள் இருந்தனர்.

விமானத்தில் செய்யக்கூடாத காரியம் - ஆறுமுகத்தால் அலறிய பணிப்பெண்கள்! | Flight Delayed By Passenger Smoking Cigarette

இதனையடுத்து பயணிகள் சீட் பெல்ட் அணிந்து விட்டனரா என்பதை விமான பணிப்பெண்கள் ஆய்வு செய்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் (30) என்ற பயணி இருக்கையில் அமர்ந்தபடி புகைப்பிடித்துக் கொண்டு இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பணிப்பெண்கள் "விமானத்திற்குள் புகைப்பிடிக்க அனுமதி இல்லை.

இனி இந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் - அதுவும் யாருக்கு தெரியுமா..?

இனி இந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் - அதுவும் யாருக்கு தெரியுமா..?

பயணம் ரத்து 

உடனடியாக சிகரெட்டை அணையுங்கள்" என்று கூறியுள்ளனர். ஆனால், அதனை கண்டுகொள்ளாத ஆறுமுகம் தொடர்ந்து புகைப்பிடித்துள்ளார். இதுகுறித்து விமானியிடம் பணிப்பெண்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விமானத்தில் செய்யக்கூடாத காரியம் - ஆறுமுகத்தால் அலறிய பணிப்பெண்கள்! | Flight Delayed By Passenger Smoking Cigarette

உடனடியாக விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு. ஆறுமுகத்தை வலுக்கட்டாயமாக பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திலிருந்து கீழே இறக்கியுள்ளனர். மேலும், அவரது மலேசிய பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் விமானம் சுமார் 1 மணிநேரம் தாமதமாக மலேசியா புறப்பட்டு சென்றது.