திடீரென கழன்று விழுந்த விமானத்தின் அவசரகால கதவு - ஆகாயத்தில் அலறிய பயணிகள்!
விமானத்திலிருந்து அவசரகால கதவு தனியாக பிரிந்து கீழே விழுந்த சம்பவ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவசரகால கதவு
அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து டெல்டா விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்ட 33-வது நிமிடத்தில் திடீரென நடுவானில் அவசரகால கதவு தனியாக பிரிந்து கீழே விழுந்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த விமானம் மீண்டும் நியூயார்க்குக்கு திரும்பியது. இதுகுறித்து விமான பயணி ஒருவர் பேசுகையில் "விமானத்தில் இருந்து ஒரு பெரிய சத்தம் கேட்டது.
விசாரணை
இதனால் விமானி அறையிலிருந்து அடுத்து வெளியான அறிவிப்புகளை கூட சரியாக கேட்க முடியவில்லை. இதனால் பயணிகள் அனைவரும் உண்மையில் பயந்து போய் விட்டோம்" என்று தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து டெல்டா விமான நிறுவனத்தின் விமான பிரதிநிதி ஒருவர் கூறுகையில் "எங்களது நிறுவனம் மீட்பு முயற்சிகளுக்கு முழுமையாக ஆதரவளிக்கும். முழு அளவில் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்தவுள்ளது.