அதிக பாலியல் வன்கொடுமை; இந்தியாவில் இங்குதான் - தமிழகத்திற்கு எந்த இடம்?
இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் எந்த மாநிலத்தில் அதிகம் நடக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2022ஆம் ஆண்டில் தேசிய குற்றப்பதிவு அறிக்கை வெளியிட்டது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் 10ஆவது இடத்தில் அசாம் மாநிலம் உள்ளது. 2022ஆம் ஆண்டு மட்டும் 1,113 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 9ஆவது இடத்தில் டெல்லி. 1,212 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் 8ஆவது இடத்தில் உள்ளது. இங்கு குற்ற விகித சதவீதம் 8.3 ஆக உள்ளது.
தமிழகத்திற்கு எந்த இடம்?
ஜார்கண்ட் 7ஆவது இடத்தில் உள்ளது. குற்ற விகித சதவீதம் 6.8 ஆக உள்ளது. 6ஆவது இடத்தை ஒடிசா மாநிலம் பிடித்துள்ளது. ஒரு ஆண்டில் 1464 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5ஆவது இடத்திலிருக்கும் மாநிலம் ஹரியானா. 1,787 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா 4வது இடத்தில் உள்ளது. குற்ற சதவீதம் 4.8 ஆக உள்ளது. 3ஆவதாக இடம்பெற்றுள்ள மாநிலம் மத்திய பிரதேசம். 3,029 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்ற விகித சதவீதம் 7.3. உத்தர பிரதேசம் இந்த பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்துள்ளது.1 ஆண்டில் 3,690 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் இடத்தில் இருப்பது ராஜஸ்தான் மாநிலம். 5,399 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு இந்த பட்டியலில் 20ஆவது இடத்தில் உள்ளது. 421 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடைசி இடத்தில் இருப்பது சிக்கிம் மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.