அதிக மக்கள் தொகை உள்ள நகரம் எது தெரியுமா? சென்னைக்கு எந்த இடம்!
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதிக மக்கள் தொகை
ஐக்கிய நாடுகள் சபை உலக நகரமயமாதல் நிலவரம் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் உலகிலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஜப்பான் தலைநகர் ஒசாகா பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. 2024ம் ஆண்டின் நிலவரப்படி ஒசாகாவில் 1,89,67,459 பேர் வசிக்கிறார்கள். சீனா, பெய்ஜிங் எட்டாவது இடத்தில் உள்ளது. 2,21,89,082 பேர் வசிக்கிறார்கள். மெக்சிகோ சிட்டி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.
நாடுகள் பட்டியல்
எகிப்து தலைநகர் கெய்ரோ ஆறாவது இடம். பிரேசில் தலைநகர் சாவ் பாலோ ஐந்தாவது இடம். பங்களாதேஷ் தலைநகர் டாக்கா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. 2024ம் ஆண்டின் நிலவரப்படி டாக்காவில் 2,39,35,652 பேர் வசிக்கிறார்கள். சீனாவின் தலைநகர் ஷாங்காய் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2024ம் ஆண்டின் நிலைப்படி டோக்கியோவில் 3,71,15,035 பேர் வசிக்கிறார்கள்.
இந்தியாவின் மும்பை 9வது இடத்திலும், டெல்லி 2வது இடத்திலும் உள்ளது. சென்னை 26ஆவது இடத்தில் உள்ளது. 2024ம் ஆண்டின் நிலைப்படி, சென்னையில் 1,20,53,697 பேர் வசிக்கிறார்கள்.