திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி!
திருமண ஊர்வலத்தில் டிஜே இசை சத்தமாக இசைக்கப்பட்டதால் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
மீரட்
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் உள்ள தாம்ராவலி கிராமத்தைச் சேர்ந்த பகவத் சிங் என்பவருக்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காகக் கடந்த வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் திருமண ஊர்வலம் நடந்துள்ளது.
அப்போது டிஜே இசை பயன்படுத்தப்பட்டு குடும்பத்தினர் அனைவரும் ஆடி, பாடி ஒன்றாகச் சாலையில் சென்றனர்.அந்த சமயத்தில் திருமண ஊர்வலம் உயர்சாதி எனக் கூறிக்கொள்ளும் தாக்கூர் மக்கள் வசிக்கும் பகுதி வழியாகச் சென்றுள்ளது.
இதற்கு அந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர்.ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
தாக்குதல்
அப்போது 40 பேர் கொண்ட கும்பல் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் மீது இரும்புக் கம்பிகள், கூர்மையான ஆயுதங்கள் மற்றும் மரக்கட்டைகள் போன்றவை கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும், குதிரையில் வந்த மணமகனைக் கண்மூடித்தனமாகத் தாக்கி தரையில் இழுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் கோட்வாலிகாவல் நிலையத்தில் 30க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைலராகி வருகிறது.