தெரியாத பெண்ணுக்கு இரவு நேரத்தில் மெசேஜ் அனுப்பினால்.. தண்டனை இதுதான் - நீதிமன்றம் அதிரடி!
தெரியாத பெண்ணிடம் இரவு நேரத்தில் I like you என மெசேஜ் செய்தால் அது ஆபாசத்திற்கு இணையானது என்று மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த முன்னாள் பெண் கவுன்சிலர் ஒருவருக்குக் கடந்த 2022 ஆம் ஆண்டு இரவு தனது 'வாட்ஸாப்' எண்ணுக்கு,பழக்கமில்லாத நபரிடம் இருந்து“you are slim, look very smart and fair, I like you” என மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் வாட்ஸாப்' எண்ணை வைத்து அந்த நபரைக் கைது செய்தது. பின்னர் நிதீமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது. அப்போது 3மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி டி. ஜி. தோப்ளே முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை புகார்தாரருக்கு "நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்கள்.
நீதிமன்றம் அதிரடி
நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருக்கிறீர்கள்,நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்,எனது வயது 4,நீங்கள் திருமணமானவரா இல்லையா?", "எனக்கு உன்னைப் பிடிக்கும்" எனப் புகைப்படங்களும் மெசேஜூம் அனுப்பப்பட்டுள்ளது.
தெரியாத பெண்ணுக்கு இரவில் இப்படி மெசேஜ் அனுப்புவது ஆபாசத்திற்கு இணையானது எனக் கருத்து தெரிவித்தார். மேலும், குற்றவாளிக்கு மாவட்ட நீதிமன்றம் அளித்த தண்டனை சரியே என்றுகூறித் தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்து வைத்தார்.