2100-இல் அதிக மக்கள் தொகையில் எந்த நாடெல்லாம் இருக்கும் தெரியுமா - இந்தியாவின் இடம்?
2100-இல் அதிக மக்கள் தொகை இருக்கக்கூடிய நாடுகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதிக மக்கள் தொகை
சில நாடுகளில் மக்கள் தொகை கணிசமான வளர்ச்சியை அனுபவிக்கும் நிலையில், மற்ற நாடுகளில் மக்கள் தொகை சரிந்து வருவதை காணலாம். அதன்படி, 2050ல் 9.7 பில்லியனாகவும், 2100ல் 10.4 பில்லியனாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஐநா மக்கள் தொகைப் பிரிவால் கணிக்கப்பட்டுள்ளபடி, 2100இல் அதிக மக்கள் தொகையை கொண்டிருக்கும் முதல் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
2100ஆம் ஆண்டில், 1,533 மில்லியன் மக்கள் தொகையுடன் இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும். சீனாவின் மக்கள் தொகை 771 மில்லியனாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக நைஜீரியா (சுமார் 546 மில்லியன்) உள்ளது. பாகிஸ்தானில் 487 மில்லியன் மக்கள் தொகை இருக்கும்.
காங்கோவின் தொகை 431 மில்லியனை எட்டும். அமெரிக்காவின் மக்கள் தொகை 394 மில்லியனை எட்டும். 323 மில்லியனாக எத்தியோப்பியா, 284 மில்லியன் மக்கள் தொகையுடன் இந்தோனேசியா இருக்கும்.
244 மில்லியனில் உலகின் 9வது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக தான்சானியா, எகிப்தின் மக்கள் தொகை 2100ஆம் ஆண்டில் 225 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.