இந்தியாவின் அசுத்தமான நகரம் எது தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
இந்தியாவின் அசுத்தமான நகரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அசுத்தமான நகரம்
நாட்டின் தூய்மையான மற்றும் அசுத்தமான நகரங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, வெளியாகியுள்ள பட்டியலில், இந்தியாவின் அசுத்தமான நகரங்களில் ஒன்றாக மேற்கு வங்கம்(ஹவுரா) உள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் முதல் 10 அசுத்தமான நகரங்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவை தான்.
ஹவுரா
ஹவுராவுடன் கல்யாணி, மத்யம்கிராம், கிருஷ்ணாநகர், அசன்சோல், ரிஷ்ரா, பிதான்நகர், கச்ரபாரா, கொல்கத்தா மற்றும் பட்பரா ஆகியவையும் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது. கொல்கத்தா மற்றும் பட்பாராவை தவிர, மற்ற நகரங்கள் தூய்மையில் 1000க்கும் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளன.
உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் பாகிஸ்தானின் லாகூர் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும், டெல்லியுடன், வியட்நாமின் ஹனோய் மற்றும் எகிப்தின் கெய்ரோ ஆகியவை இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தூர் 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரை தூய்மைக் கணக்கெடுப்பில் நாட்டிலேயே தூய்மையான நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.