டெல்லி காற்றை சுவாசிப்பது தினமம் 40 சிகரெட்டுக்கு சமம் - தமிழ்நாட்டிலும் இதே நிலையா?

Tamil nadu Delhi India
By Swetha Nov 19, 2024 08:30 AM GMT
Report

இந்தியாவில் உள்ள சில மாநிலங்களின் காற்று மாசுப்பாடு அல்லது தரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

டெல்லி காற்று

அதிக மாசடையும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாக அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அந்த வகையில் அதிக காற்று மாசுப்பாடு அடைந்த நகரமாக டெல்லி மாறியுள்ளது.

டெல்லி காற்றை சுவாசிப்பது தினமம் 40 சிகரெட்டுக்கு சமம் - தமிழ்நாட்டிலும் இதே நிலையா? | Delhi Air Equal To 40 Cigarete How About Tamilnadu

மக்களை இயல்பு வாழக்கையை முடக்கிப்போடும் அளவுக்கு காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. அதை தொடர்ந்து, அரியானா, உத்தரப் பிரதேசம், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் ஆகியவற்றில் கடந்த சில வாரங்களாக காற்றின் தரம் குறைந்துவிட்டதாக தெரிகிறது.

டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர் பனிமூட்டம் போல மாசு புகை சூழ்ந்ததால் ஆங்காங்கே விபத்து ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சென்னை உட்பட பெரு நகரங்களின் காற்றின் தரமும் குறைந்து வருகிறது. இந்த காற்றை சுவாசிப்பதால் உடல்ரீதியாக பல நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியர்களின் ஆயுள் 5 வருடம் குறையப் போகுது : வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியர்களின் ஆயுள் 5 வருடம் குறையப் போகுது : வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில்..

அந்த வகையில் சிகெரெட் புகைப்பதால் ஏற்படும் அபாயங்களான புற்று நோய் உள்ளிட்ட தீங்குகள் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதாலும் ஏற்படுகிறது என்ற ஒப்பீடு வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி காற்றை சுவாசிப்பது தினமம் 40 சிகரெட்டுக்கு சமம் - தமிழ்நாட்டிலும் இதே நிலையா? | Delhi Air Equal To 40 Cigarete How About Tamilnadu

அதாவது, டெல்லி காற்றின் தரம் 978 என்ற மோசமான நிலையில் உள்ளது. இது ஒரு நாளைக்கு சுமார் 40 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்று தெரியவந்துள்ளது. அரியானாவில் 29 சிகெரெட்டுகளை சுவாசிப்பதற்கு சமமாகும்.

தமிழ்நாட்டு பொருத்தவரை காற்றின் தரம் 164 ஆக உள்ள நிலையில் ஒரு நாளைக்கு 2 சிகெரெட்டுகளை புகைப்பதுக்கு சமம். ஆந்திர தெலுங்கானாவில் தினம் 2 சிகெரெட்டுகள், கேரளா, கர்நாடகாவில் தினம் 1 சிகெரெட்டுகளுக்கு சமம் என்று தெரியவந்துள்ளது.