இந்தியர்களின் ஆயுள் 5 வருடம் குறையப் போகுது : வெளியான அதிர்ச்சி தகவல்

1 வாரம் முன்

அதிக மாசடையும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாக அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் தெரிவித்துள்ளது .

உலக புகழ்பெற்ற சிகாகோ பல்கலைக்கழகத்தில் ,மனித வாழ்க்கை மற்றும் உடல் ஆரோக்கத்தில் காற்றின் தரம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டது இந்த ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின.

ஆயுளை இழக்கும் இந்தியர்கள்

அதில், இந்தியாவில் இருக்கும் கங்கை நதியை சுற்றியுள்ள சமவெளி பகுதிதான் உலகிலேயே அதிகம் மாசடைந்த பகுதியாக உள்ளதாகவும் . பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரையிலான இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் சராசரி ஆயுட் காலத்தில் 7 ஆண்டுகள் 6 மாதங்கள் இழப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியர்களின் ஆயுள் 5 வருடம் குறையப் போகுது : வெளியான அதிர்ச்சி தகவல் | Indians Reduced To5 Years Due To Air Pollution

இந்த நிலை தொடர்ந்தால் சராசரி இந்தியர்களின் ஆயுட்காலத்திலிருந்து 5 ஆண்டுகள் குறையும் அபாயம் ஏற்படும். உலக அளவில் காற்று மாசு காரணமாக ஆயுட் காலம் 2.2 ஆண்டுகள் குறையும் வாய்ப்பு  உள்ளதாக கூறியுள்ளது

மோசமான நிலையில் இந்தியா

அதிக மாசு உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகள் அதிக காற்று மாசு உள்ளது. குறிப்பாக டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில்தான் காற்று மாசு மிக மோசமான அளவில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

இந்தியர்களின் ஆயுள் 5 வருடம் குறையப் போகுது : வெளியான அதிர்ச்சி தகவல் | Indians Reduced To5 Years Due To Air Pollution

இதே நிலை நீடித்தால் டெல்லி மக்களின் சராசரி ஆயுள் 10.1 ஆண்டுகள், உத்தரப்பிரதேச மக்களின் சராசரி ஆயுள் 8.9 ஆண்டுகள், பீகார் மக்களின் ஆயுள் 7.9 ஆண்டுகளாக குறையும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.