நாக்கை இரண்டாக வெட்டி.. வெளியான அதிர்ச்சி வீடியோ - இன்ஸ்டா பிரபலம் வெறிச்செயல்!
நாக்கை இரண்டாக வெட்டி டாட்டூ போட்ட இளைஞர் உள்பட இரண்டு பேர் கைது செய்துள்ளனர்.
நாக்கை வெட்டி
திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் டாட்டூ கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் தன் நாக்கை இரண்டாக பிளந்து அறுவை சிகிச்சை செய்தார். அதன் பிறகு, மும்பை சென்ற ஹரிஹரன் 2 லட்சம் ரூபாய் செலவு செய்து கண்ணில் டாட்டூ குத்திக்கொண்டார்.
இவர் வைத்திருக்கும் கடையில் டாட்டூ மட்டுமின்றி கண்களுக்கு வண்ணம் தீட்டுவது, நாக்கை ஆப்ரேஷன் செய்து இரண்டாக ஆக்குவது மற்றும் அதில் வண்ணம் தீட்டுவது என இதுப்போன்ற செயல்களில் ஈடுப்படுவது மட்டுமல்லாமல் அதை வீடியோ எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வந்துள்ளார்.
இன்ஸ்டா பிரபலம்
வித்தியாசமான முறையில் உடல் முழுவதும் பச்சை குத்திக்கொள்வதில் ஆர்வம் கொண்ட இவர் ரீல்ஸ்களால் பிரபலம் அடைந்தார். இந்த நிலையில், திருவெறும்பூர் கூத்தப்பாரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு நாக்கை இரண்டாக பிளக்கும்
அறுவை சிகிச்சையை எந்த மருத்துவ ஏற்பாடும் இன்றி ஆபத்தான முறையில் ஹரிஹரன் செய்துள்ளார். அதனை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டவிட்ட நிலையில், ஹரிஹரனையும் ஜெயராமனையும் போலீசார் கைது செய்தனர்.
மருத்துவம் பயிலாமலே நாக்கில் அறுவை சிகிச்சை செய்தது சட்டவிரோதம் என்ற புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.c