இளைஞர்களுக்கு எச்சரிக்கை.. ஆசையாக டாட்டூ குத்திய கல்லூரி மாணவருக்கு நேர்ந்த துயரம்!
கல்லூரி மாணவர் ஒருவர் டாட்டூ போட்டுக்கொண்டதால் நேர்ந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாட்டூ குத்திய மாணவர்
பெரம்பலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் பரத், 22 வயதான இவர் கடந்த 20 நாட்களுக்கு முன் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்பொழுது அங்கு ஒரு டாட்டூ கடைக்கு சென்று நங்கூரம் டாட்டூவை ஆசையாக தனது கழுத்தில் குத்தியுள்ளார்.
பின்னர் சுற்றுலா முடிந்து வீடு திரும்பிய அவர் விவசாய பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார், அப்பொழுது அவர் டாட்டூ போட்டுக்கொண்ட இடத்தில் வலி ஏற்பட்டுள்ளது. பிறகு அந்த இடத்தில கட்டி உருவானது, அதில் வலி அதிகரித்துள்ளது, இவரது குடும்பத்தில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
உயிரிழப்பு
இந்நிலையில், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து அந்த கட்டியை நீக்கினர். அந்த சிகிச்சை பலனளிக்காத முலையில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சர்க்கரை நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதுபோன்று டாட்டூ குத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டாட்டூக்களில் பயன்படுத்தப்ப்படும் ரசாயன மைகள் ஒவ்வாமையை சிலருக்கு ஏற்படுத்தும் என்றும், ஏதாவது சிறு பிரச்சனை என்றாலும் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.