பிரபல கல்லூரி மாணவர் ரத்த வாந்தி எடுத்து பலி - ஈசிஆரில் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!
பிரபல தனியார் கல்லூரியில் மாணவர் ஒருவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.
மாணவர் பலி
சென்னை கானத்தூரில் கிழக்கு கடற்சாலையை ஒட்டி தனியார் கடல்சார் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏரளமான மாணவர்கள் பிஇ,பிடெக், பிஎஸ்சி உள்பட பல்வேறு படிப்புகளை படித்து வருகின்றனர்.
அதன் வரிசையில், கடலூரைச் சேர்ந்த பிரசாந்த்(22) என்ற மாணவர் பிஇ நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். கல்லூரி தங்கும் விடுதியில் தங்கியுள்ள இவர் இன்று ரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.
மாணவர்கள் போராட்டம்
உடனே அவரை தனியார் மருத்துவமனையின் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில்,
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் டூட்டி ஆபிசர் புருஷோத்தமன் என்பவர்,
உடல் நிலை பாதிக்கப்பட்ட மாணவர் பிரசாந்த்துக்கு ஓய்வு கொடுக்காததால் உயிரிழந்ததாக குற்றம்சாட்டினர். இதனால் சக கல்லூரி மாணவர்கள் நியாயம் கேட்டு கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து விரைந்து வந்த போலீஸார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். மேலும், 3 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ள கல்லூரி நிர்வாகம், புருஷோத்தமனை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.