குளிர்பானம் குடித்த 2 சிறுவர்களுக்கு ரத்த வாந்தி - தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதி

samugam-viral-news
By Nandhini Sep 21, 2021 02:50 AM GMT
Report

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில், குளிர்பானம் குடித்த 2 சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த செந்தில் என்பவரின் 8 வயது மகனும், 6 வயதான தங்கை மகனும் வீட்டின் அருகே உள்ள மளிகைக்கடையில் குளிர்பானம் வாங்கி குடித்திருக்கிறார்கள்.

அவர்கள் குடித்த சில மணி நேரத்தில் அந்த சிறுவர்கள் 2 பேரும் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளனர். இதைப் பார்த்த பெற்றோர்கள் சிறுவர்களை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் 2 சிறுவர்களுக்கும் தீவிர கிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

குளிர்பானம் குடித்த 2 சிறுவர்களுக்கு ரத்த வாந்தி - தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதி | Samugam Viral News