சென்னையில் நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
நாளை சென்னைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை
கேரளா மாநிலத்தில், ஆண்டுதோறும் ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்களுக்கு கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இது பாதாள லோகத்தை ஆளும் மகாபலி சக்கரவர்த்தி பூவுலகிற்கு வருகை தருவதாகவும், அவரை வரவேற்கும் விதமாக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நாட்களில் கேரள மக்கள் பாரம்பரிய உடையணிந்து தங்கள் வீடுகளில் பல வண்ண பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, விளக்கேற்றி வைத்து வழிபடுவர்.
உள்ளூர் விடுமுறை
இந்நிலையில், கேரளா மாநிலத்தில் மட்டுமின்றி தமிழகத்திலும் பல கேரளத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதனால் கேரள மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களுக்கு நாளை ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்ட அறிவிப்பில், "ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் 29ம் தேதி சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு செப்டம்பர் 2ம் தேதி பணி நாளாக செயல்படும்" என்று தெரிவித்துள்ளனர்.