நாளை ஜி20 மாநாடு சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

Chennai Tamil Nadu Police
By Thahir Jul 23, 2023 07:27 AM GMT
Report

ஜி20 மாநாட்டு நிகழ்வுகள் மாமல்லபுரத்தில் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் இன்றுமுதல் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜி20 மாநாடு

இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுள்ளது.

Drones banned in Chennai and Mamallapuram

ஜி20 உச்சி மாநாடு தொடர்பான ஆயத்த கூட்டங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஜி20 மாநாட்டின் ஆயத்த நிகழ்வுகள் மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இதில் 29 வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் 15 பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இவர்கள் சென்னை கிண்டி மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.

ட்ரோன் பறக்க தடை 

வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்குமிடங்கள், விழா நடைபெறும் இடங்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மாமல்லபுரத்தில் நடைபெறும் ஜி20 நிகழ்வுகளில் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதை ஒட்டி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Drones banned in Chennai and Mamallapuram

இந்த நிலையில், சென்னையில் ஜி-20 கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடைபெறும் பகுதியில் இன்று முதல் ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து சென்னை மாநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜூன் 23 முதல் 26ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.