தலைமுடி அதிகமாக உதிர்கிறதா ? தக்காளி சாறு மசாஜ் மட்டும் செய்தால் இருந்தா போதும் -ட்ரை பண்ணுங்க!
தலைமுடி வளர்ச்சியைத் தக்காளி சாற்றை எப்படிப் பயன்படுத்துவது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தலைமுடி வளர்ச்சி
பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்குத் தலைமுடி உதிர்வு, வழுக்கை விழுதல் என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. இதற்குப் பல இயற்கையான தீர்வுகளைத் தேடி வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் உடலில் வெப்பம் அதிகரித்தல், உணவில் ஊட்டச்சத்துக்கள் குறைபாடு,சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்டவை மூலம் தலை முடியானது சீக்கிரமே உதிர்த்தல் ஏற்படுகிறது.அப்படிப் பார்க்கும் பொழுது சொட்டை விழுந்த இடத்தில் கூட தலைமுடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கு வீட்டில் இருக்கும் தக்காளியைக் கொண்டு சரிசெய்யலாம்.
முதலில் 1 முதல் 2 ஃபிரஷான தக்காளிப் பழங்களை மிக்சியில் சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள சாற்றைத் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இதனை நேரடியாகச் சொட்டை விழுந்த பகுதிகளில் தடவவும்.
செய்முறை
தக்காளி சாற்றைத் தடவிய பிறகு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்குப் பொறுமையாக அந்த இடத்தில் மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் காத்திருந்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைமுடியை லேசான ஷாம்பு பயன்படுத்தி அலசவும்.
வாரம் 2 முறை இந்த தீர்வை பின்பற்றி வர முடிவுகளைக் கண்கூடாகப் பார்க்கலாம்.தக்காளி சாற்றில் உள்ள லைகோபின் இந்த வலிமையான ஆன்டி-ஆக்சிடன்ட் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து தலை முடியைப் பாதுகாக்கிறது.
தக்காளி சாற்றில் நார்ச்சத்து, பொட்டாசியம், உயிர்ச்சத்து C மற்றும் கோலின் ஆகியவை உள்ளன. இவை மயிர்க்கால்களை ஈரப்பதத்தோடு வைத்து ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியை அதிகரிப்பதற்குத் தேவையான சீபம் உற்பத்தியைத் தூண்டுகிறது.