ஒரே நாளில் அதிரடியாக சரிந்த தக்காளி விலை - இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!
தமிழ்நாட்டில் திடீரென உயர்ந்த காய்கறி விலை தற்பொழுது குறைந்துள்ளது.
விலை உயர்வு
வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து குறைந்ததால், தமிழகத்தில் கடந்த சில வாரமாகவே காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
அதில் தக்காளி, சின்ன வெங்காயம், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இவற்றின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இன்றைய நிலவரம்
இந்நிலையில், தக்காளி விலை 20 - 30 ரூபாய் உயர்ந்து 120 - 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் அவதிபட்டனர், இதனையடுத்து ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்பனை செய்ய முடிவு செய்தனர்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனால் மார்க்கெட்டில் விற்பனை குறைந்தது, இதன்காரணமாக தற்பொழுது ஒரே நாளில் தக்காளி ரூ.40 குறைந்து, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.