தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த புதிய மின் கட்டணம் - எவ்வளவு தெரியுமா?

Tamil nadu India
By Vinothini Jul 02, 2023 04:52 AM GMT
Report

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மின்வாரியம்

தமிழ்நாட்டில் கடந்த வருடம் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்பட்டது. 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்தப்பட்டது.

electricity-bill-increased-in-tamilnadu

ஒரு வருடத்திற்கு பிறகு, 28 முறை மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு மாற்றவில்லை என்றால், தமிழ்நாடு அரசுக்கு நீங்கள் மின்சாரம் கொடுக்க கூடாது என்று மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்தது.

கட்டண உயர்வு

இந்நிலையில், தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த முறை வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு கிடையாது. மேலும், இந்த முறை தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் 2.18 சதவிகிதம் மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது.

electricity-bill-increased-in-tamilnadu

அதாவது, ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.11 இல் இருந்து ரூ.11.25 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் வீடுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை, பின்னர் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஏழை மக்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று மின்சார துறை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.