மீண்டும்.. மீண்டுமா! ஒரே நாளில் இவ்வளவு ஏறிய தக்காளி விலை - எவ்வளவு தெரியுமா?
தக்காளி விலை ஒரே நாளில் ரூ.30 அதிகரித்து விற்பனையாகிறது.
தக்காளி விலை
தக்காளி, வெங்காயம் விலையை தற்போதெல்லாம் பயத்தோடு பார்க்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது. திடீரென, தக்காளி விலை 140 வரை உயர்ந்த நிலையில், படிப்படியாக குறைந்து வந்தது.
இந்நிலையில், வரத்து குறைவால் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதன்படி, சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று ஒரே நாளில் ரூபாய் 30 உயர்ந்து தக்காளி கிலோ ரூ.140க்கு விற்பனையாகிறது.
மீண்டும் உயர்வு
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை கடைகளிலும் மேலும் விலை உயர்ந்து ரூ. 160 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாள்தோறும் 1000 முதல் 1200 டன் வரை தக்காளி வரத்து இருந்த நிலையில் 300 டன்னாக குறைந்ததால் இந்த விலையேற்றம் கண்டுள்ளது.
இதற்கிடையில், நியாய விலைக்கடைகள் மற்றும் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ரூபாய் 60க்கு விற்பனை நடந்து வருகிறது. நாடு முழுவதும் 300 ரேஷன் கடைகளில் விலை மலிவாக விற்பனையாகிறது.