மீண்டும் உச்சத்தை தொட்ட தக்காளி விலை... எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
தக்காளி விலை
தமிழ்நாட்டில் தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுள்ளது, தற்பொழுது தக்காளியின் விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது இறக்குமதி அதிகரிப்பால் விலை குறைந்தது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
சென்னையில் சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த சில தினங்களாகவே தக்காளி விலை குறைந்து வந்தது.
இன்றய நிலவரம்
இந்நிலையில், 2 நாட்களாக ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி விலை இன்று ரூ.10 உயர்ந்து ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மதனபள்ளி, கர்நாடகா சிக்மங்ளூரூ, கோலார், ஒட்டப்பள்ளி, ஆகிய பகுதியில் இருந்து 400 டன் மட்டுமே வருகை தந்துள்ளது.
மேலும் இதர காய்கறிகள் 5500 டன் அளவு வந்து இறங்கியுள்ளது. சென்னையில் பன்ணை பசுமை மற்றும் அமுதம் அங்காடியில் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.