நேற்று ரூ.80'க்கு விற்பனை - இன்று கோயம்பேட்டில் பாதியாக குறைந்து தக்காளியின் விலை !
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளியின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
காய்கறிகளின் விலை
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை தொடர்ந்து மாறிக்கொண்டே தான் இருக்கும். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. பெட்ரோல் - டீசல் விலை உயர்வில் துவங்கி, நாட்டில் நடைபெறும் போராட்டங்கள், வானிலை மாற்றங்கள் என அனைத்துமே பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன
அவ்வாறே, கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால், காய்கறிகளின் வரத்து குறைந்து விலைகள் கடுமையாக உயர்ந்தன.
குறைந்தது...
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று வரை ஒரு கிலோ தக்காளி ரூ.80'க்கும், சில்லறை வணிகத்தில் 100 ரூபாய்க்கும் நெருங்கியும் விற்பனையாகின. இன்று மழை பாதிப்புகள் குறைந்து தக்காளியின் விலை கடுமையாக குறைந்துள்ளது.
ஒரு கிலோ தக்காளியின் விலை இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.45'க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் நகரின் பல்வேறு இடங்களில் சில்லறை வணிகத்தில் ரூ.60'க்கு மிகாமல் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.