தக்காளி வாங்க லோன் தான் போடனும் - இன்னைக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக் குறையாத மக்கள்!
வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தக்காளி விலை
கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் தக்காளி 100 முதல் 150 வரை விற்கப்படுகிறது. தொடர்மழை காரணமாக தக்காளி சாகுபடி குறைந்ததால் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.
அந்த வகையில் நேற்று ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் 100 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 40 ரூபாய் உயர்ந்து 140 ரூபாய் என்ற புதிய உச்சத்தையும் தொட்டது.
வரத்து குறைவு
இந்நிலையில், கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை மாற்றமின்றி 100 ரூபாய்க்கும், சில்லறை விலையில் 10 ரூபாய் குறைந்து 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சின்ன வெங்காயமும் ஒரே நாளில் 20 ரூபாய் உயர்ந்து 220 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விளைச்சல் அதிகரிக்காமல் தக்காளியின் விலை குறைய வாய்ப்பில்லை என வணிகர்கள் கூறுகின்றனர்.