டோல்கேட்டில் இவர்களுக்கெல்லாம் கட்டணம் கிடையாது - உடனே அப்ளை பண்ணுங்க!
இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடியில் அப்ளை செய்த சிலருக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
சுங்கச்சாவடி
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சராசரியாக 60 கிமீ தொலைவு இடைவெளிகளில் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளது. இதில் இரு சக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
முதலில் சுங்கச்சாவடியில் உள்ள கவுண்டரில் பணம் கொடுத்து கட்டணம் செலுத்த வேண்டும். தற்பொழுது பாஸ்டாக் (fastag) மூலம் ஆன்லைனில் ரீசார்ஜ் செய்து கட்டணம் செலுத்தி கொள்ளலாம். இதில் பல நடுத்தர மக்களுக்கு நிதிச்சுமையாக இருந்தது.
விதிவிலக்கு
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள், 2008ன் விதி 11இன் கீழ், பயனர் கட்டணம் செலுத்துவதில் இருந்து சில வாகனங்களுக்கு விலக்கு தரப்பட்டள்ளது.
அதில் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மாநில ஆளுநர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், மத்திய அமைச்சர், மாநில முதலமைச்சர், உச்ச நீதிமன்ற நீதிபதி, மாநில அமைச்சர், யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர், தலைமை அதிகாரிகள், மாநில சட்ட மேலவை தலைவர், மாநில சட்ட மேலவை சபாநாயகர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்,
இராணுவத் தளபதி, துணைத் தளபதிகள் மற்றும் பிற சேவைகளில் சமமானவர்கள், மாநில அரசு தலைமை செயலாளர், இந்திய அரசின் செயலாளர், மாநில கவுன்சில் செயலாளர் மக்கள் மன்ற செயலாளர் அரசுப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பிரமுகர், எம்எல்ஏ மற்றும் எம்எல்சி,
பரம் வீர் சக்ரா, அசோக் சக்ரா, மகா வீர் சக்ரா, கீர்த்தி சக்ரா, வீர் சக்ரா மற்றும் சௌர்ய சக்ரா விருது பெற்றவர்கள் இந்திய டோல் (இராணுவம் மற்றும் விமானப்படை) சட்டம், 1901 27 இன் கீழ் தகுதியானவர்கள் பாதுகாப்பு அமைச்சகம் சீருடையில் மத்திய மற்றும் மாநில ஆயுதப் படைகள்,
துணை ராணுவப் படைகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் எக்ஸிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் எக்ஸிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் தீயணைப்பு துறை அல்லது அமைப்பு அதிகாரிகள் NHAI தேசிய நெடுஞ்சாலைகளின் ஆய்வு, கட்டுமானம் அல்லது செயல்பாடு அல்லது பராமரிப்பு மற்றும் கணக்கெடுப்பு நோக்கத்திற்காக வாகனங்களைப் பயன்படுத்தும் அரசு நிறுவன வாகனங்கள்
ஆம்புலன்ஸ் இறுதி ஊர்வலம் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட இயந்திர வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கு சுங்கக்கட்டணம் செலுத்த விதிவிலக்கு ஆகும்.
மேலும், இந்த விலக்கு அளிக்கப்பட்ட நபர்கள் fastag விண்ணப்பத்தின் போது, விண்ணப்ப படிவத்துடன் வாகனத்தின் ஆர்சி, ஆதார் அட்டை/ ஓட்டுநர் உரிமம்/ பான் அட்டை/ வாக்காளர் அட்டை ஆகியவற்றில் ஒன்று, விலக்கு சான்று ஆகிய ஆவணங்களின் நகல்களை ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும்.