சென்னை பேருந்தில் ஜூன் 21 முதல் கட்டணமில்லா பயணம் - யாருக்கெல்லாம் தெரியுமா?
கட்டணமில்லா பயணம் செய்வதற்கான டோக்கன் வழங்கும் அறிவிப்பை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
மூத்தக்குடி மக்கள்
சென்னையில் வாழும் மூத்தக்குடி மக்கள் கட்டணம் இல்லாமல் சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்வதற்கான டோக்கன்கள் வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் வழங்கப்படும்.
இதற்காக சென்னையில் உள்ள 42 பணி மனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அடையாள அட்டையை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..
அடையாள அட்டை
விண்ணப்பிக்க விரும்பும் மூத்த குடிமக்கள் தங்களுடைய இருப்பிடச் சான்று, ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்விச் சான்று, 2 வண்ண புகைப்படம் ஆகியவற்றை கொடுத்து அடையாள அட்டை பெறலாம்.
வரும் ஜூன் 21 ம் தேதி முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7:30 மணி வரை 42 பணிமனைகளிலும் டோக்கன்கள் வழங்கப்படும்.