மகளிர் உரிமைத் தொகை பெற ஜுலை 20 முதல் டோக்கன் விநியோகம்..!

Government of Tamil Nadu
By Thahir Jul 15, 2023 04:00 AM GMT
Report

மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் வழங்குவதற்கு ஜுலை 20 முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது.

அரசு நடவடிக்கை 

கடந்த 2021 ஆம் சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு  மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை வழங்க உள்ளது.

Token distribution from July 20

இதையடுத்து மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான அனைத்து நடவடிகைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், அரசு ஊழியர்கள் , குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. ஏழை, எளிய மக்களை இந்த திட்டம் சென்றடைய அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

டோக்கன்கள் வழங்க திட்டம் 

இதனை கண்காணிக்க மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்த பணியில் தன்னார்வலர்கள் உட்படுத்தப்பட உள்ளனர்.

செப்டம்பர் மாதம் முதல் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. அதற்கு விண்ணப்பிக்க மகளிர் அந்தந்த பகுதி ரேஷன் கடைகளின் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அதற்கான டோக்கன் வரும் இருபதாம் தேதி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி அந்த டோக்கனை பெற்று விண்ணப்பத்தை நிரப்பி ரேஷன் கடையில் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.