குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 பெற தகுதியான குடும்பங்களை கண்டறிவது எப்படி?

M K Stalin Government of Tamil Nadu Tamil Nadu Budget 2023
By Thahir Mar 22, 2023 09:06 AM GMT
Report

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 பெற தகுதியான குடும்பங்களை கண்டறிவது எப்படி என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

மாதம் ரூ.1000 பெற தகுதிவாய்ந்த குடும்பங்கள் எவை? 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் இந்த திட்டம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 2023 முதல் மார்ச் 2024 வரை (7 மாதங்கள்) ரூ.7000 கோடி என்றால் ஒரு மாதத்திற்கான செலவு ரூ.1000 கோடி.

இந்த 1000 கோடி ரூபாயில் மாதத்திற்கு சுமார் 1 கோடி குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கலாம்.

how-to-find-eligible-families-to-get-rs-1000

தமிழ்நாடு முழுவதும் 2.2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இதிலிருந்து 1 கோடி குடும்ப அட்டைகளை தேர்ந்தெடுப்பது என்பது கேள்வியாக உள்ளது.

குடும்ப அட்டைகள் எத்தனை வகைகள் உள்ளது?

தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைகள் மொத்தம் 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.


அந்தியோதயா அட்டை (35 கிலோ அரிசி) இந்த ரேசன் அட்டை வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு கொடுக்கப்பட கூடியது. இந்த அட்டை வைத்திருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 18,64,201.

சாதாரண அரிசி அட்டை (20 கிலோ அரிசி) இந்த அட்டையை சுமார் 1,98,24,931 பேர் வைத்துள்ளனர்.

சர்க்கரை அட்டை இந்த அட்டை வைத்திருப்போர்களுக்கு அரிசியை தவிர்த்து மற்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அட்டையை சுமார் 3,83,756 பேர் வைத்துள்ளனர்.

how-to-find-eligible-families-to-get-rs-1000

கௌரவ அட்டை இந்த அட்டையை ஒரு அடையாளத்திற்காக வைத்திருப்பார்கள் இவர்கள் எந்த பொருளும் ரேசன் கடையில் வாங்க மாட்டார்கள். இந்த அட்டையை 53,146 பேர் வைத்துள்ளனர்.

மொத்தமுள்ள சுமார் 2 கோடி அரிசி அட்டைகளில் யாருக்கு மாதம் ரூ.1000 கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதை பார்க்கலாம். 

இந்த 2 கோடி அட்டைகளை மேலும் 2 வகைகளாக பிரிக்கப்படுகின்றன முன்னுரிமை அட்டைகள் மற்றும் முன்னுரிமை இல்லாத அட்டைகள்.

முன்னுரிமை அட்டைகள்

இதில் முன்னுரிமை அட்டைகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் முன்னுரிமை அட்டைகளில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ள என்பதை பார்க்கலாம்.

 அரிசி அட்டை வைத்திருப்பவர்களில் பின் தங்கிய பிரிவினர் தனியாக பிரிக்கப்பட்டு முன்னுரிமை குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு மாற்றுதிறனாளிகள், திருநங்கைகள், பழங்குடியினர், ஆதரவற்றோர், விதவைகள் ஆகியோர் முன்னுரிமை பிரிவில் சேர்க்கப்படுவார்கள்.

யாருக்கெல்லாம் முன்னுரிமை கிடைக்காது?

2017ல் தமிழக அரசு வெளியிட்டுள்ள விதிகளின் படி வருமான வரி செலுத்துவர்கள் அதாவது உங்கள் ரேசன் அட்டையில் பெயர் உள்ளவர்களில் ஒருவர் வருமான வரி செலுத்தினால் உங்களுக்கு முன்னுரிமை கிடைக்காது.

அதே போல 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களாக இருந்தால் உங்களுக்கு முன்னுரிமை கிடைக்காது.

பணியில் இருக்க கூடிய அரசு ஊழியர்கள், அல்லது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் குடும்பங்களுக்கு நீங்கள் மாநில அரசு அல்லது மத்திய அரசு எதில் பணியாற்றி இருந்தாலும் உங்களுக்கு முன்னுரிமை கிடைக்காது.

வீட்டில் சொந்தமாக கார் வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்னுரிமை கிடையாது.

அநேகமாக இந்த வகைப்பட்டவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுவதற்கான வாய்ப்பு என்பது குறைவு.

யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 கிடைக்கும் 

கிட்டதட்ட யாருக்கெல்லாம் உறுதியாக ரூ.1000 கிடைக்கும் என்றால் அந்தியோதயா அட்டை ( 35 கிலோ அரிசி ) உள்ளவர்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அதே போன்று அரிசி அட்டை உள்ளவர்களுக்கு முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. 

அந்தியோதயா அட்டை 18,64,201 மற்றும் அரிசி அட்டை (PHH) 95,61,593 என மொத்தம் கூட்டினால் 1,14,25,794 பேர் வருகிறது. மேலும் பட்ஜெட்டில் அறிவித்த படி ஒரு கோடி பேருக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

யாருக்கெல்லாம் கிடைக்காது? 

அநேகமாக மாதம் தோறும் ரூ.1000 கிடைக்காத குடும்ப அட்டைகள் என்று பார்த்தால் அரிசி அட்டை (NPHH),சர்க்கரை அட்டை, கௌரவ அட்டை வைத்திருக்க கூடிய முன்னுரிமை இல்லாத பிரிவில் இருப்பவர்களுக்கு இந்த தொகை கிடைக்காது என்பது தெரியவருகிறது.

குறிப்பு;  இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை ஒரு அடிப்படை புரிதலுக்கான பதிவு, இது குறித்து அரசு ஒரு விரிவான அறிவிப்பை வெளியிடும்.