ரேசன் கார்டுகளுக்கு அரிசி, சக்கரையுடன் இந்த பொருளும் வழங்கப்படும் - அரசு அதிரடி அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 ஆண்டுக்கான பொது பட்ஜெட் நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இன்று 2023 - 2024 ஆம ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
வேளாண் பட்ஜெட்டின் அறிவிப்புகள்
* ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை.
* ரேசன் கடைகளில் கம்பு உள்ளிட்ட சிறுதனியாகங்களை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை.
* சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு.
* உழவர் உற்றபத்தியாளர் குழுக்களுக்கு மானியம் வழங்கப்படும்.
* விவசாயிகள் தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்ள வாட்ஸ் அப் குழு.
* மாடு,ஆடு, வளர்ப்பு போன்ற பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள ரூ.50 கோடி ஒதுக்கீடு.
* உழவர் நலன் சார்ந்த தகவல்களை வழங்க இணையதளம் உருவாக்கப்படும் என அறிவிப்பு.
* மின்னணு உதவி மையங்களை செயல்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
* 385 வட்டார வளர்ச்சி மையங்களில் விவசாயிகளுக்கான சேவைகள் வழங்க வேளாண் மின்னணு உதவி மையம்.
* ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகங்களை சேர்ந்த சிறு விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்க ரூ.11 கோடி ஒதுக்கீடு.