பத்திரப்பதிவு இல்லை - இன்று 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை!
சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சார்பதிவாளர் அலுவலகம்
தமிழ்நாட்டில் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் மட்டும் விடுமுறை நாளான சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் திட்டம் அமலில் இருக்கிறது. ஆனால், வரும் 24ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை என்பதால்,
சார்பதிவாளர் அலுவலக சார்பதிவாளர்கள், சார்பதிவாளர் அலுவலகங்களின்பணியாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் அக்டோபர் 22ஆம் தேதியான சனிக்கிழமை இன்று பத்திரப்பதிவுக்கு விலக்கு கோரப்பட்டது.
விடுமுறை
இதற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் பின்னர் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து இன்று பத்திரப்பதிவு நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.