இனி திருமணச் சான்றிதழை ஆன்லைனிலேயே திருத்தம் செய்யலாம் - தமிழக அரசு அறிவிப்பு
By Nandhini
திருமணத்தைப் பதிவுசெய்ய அசல் ஆவணங்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும். திருமணச் சான்றிதழில் சிறுசிறு திருத்தங்கள் செய்ய வேண்டுமானாலும் கூட சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று அதை மாற்ற வேண்டும்.
இந்நிலையில், திருமணச் சான்றிதழை இணையதளம் வழியாக திருத்தம் செய்யும் வசதியை அறிமுகம் செய்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
மேலும், புதிய அரசாணையால் சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு இனி சார் பதிவாளர் அலுவலகம் செல்ல தேவை கிடையாது.
திருமணம் முடிந்த தம்பதிகள் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்தின் மூலம் பயனர் பதிவை உருவாக்கி திருமண பதிவு செய்து கொள்ளலாம்.