ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை
Today Gold Price
By Fathima
கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது, இதற்கு போட்டியாக வெள்ளியின் விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கத்தின் விலை கிராமுக்கு 450 ரூபாயும், சவரனுக்கு 3600 ரூபாயும் உயர்ந்து ஒரு கிராம் 13,900 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 2,800 அதிகரித்து 1,14,000 விற்பனை செய்யப்படுகிறது, கிராம் 14,250க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் ஒரு கிராம் 340 ரூபாய்க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.