ஒரே நாளில் 12,000 ரூபாய் உயர்ந்த வெள்ளி விலை - அப்போ தங்கம்?
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜன.20) விலை அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரம்
அதன்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்து ரூ.1,08,880க்கும், கிராமுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.13,610-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.330க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ரூ.3,30,000க்கும் விற்பனையாகிறது.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : உக்ரைன் போரில் நான்கரை இலட்சம் வீரர்கள் பலி IBC Tamil
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்தியமைக்குக : அரசுக்கு இடித்துரைக்கும் ஐ.நா நிபுணர்கள் IBC Tamil