ஒரே வாரத்தில் ரூ.1000க்கு மேல் அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் குஷி!
கடந்த 4 நாட்களில் யில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்துள்ளது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது.
சரிவு
அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,330ஆகவும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,880 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து ரூ.4,391 ஆகவும், சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.35,128 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ரூ.76.00 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.76,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து IBC Tamil