மக்களே மிஸ் பண்ணிடாதீங்க - தொடர் சரிவில் தங்கம் விலை!
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது.
தொடர் சரிவு
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு, 160 குறைந்து, ரூ.43,120க்கும், கிராம் ரூ.20 குறைந்து 5,390க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.77.50-க்கும், வெள்ளி ரூ.77,500-க்கும் விற்பனையாகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.